மூத்த ஊடகவியலாளர் அந்தோனி மார்க் கொவிட் தொற்றால் காலமானார்!

Date:

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப் பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் தனது (80)ஆவது வயதில் நேற்று (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இரவு உயிரிழந்தார்.இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மூத்த ஊடகவியலாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார்.

குரலற்ற மக்களின் குரலாகவும் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கவும், தமிழ் கைதிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்ததோடு,பல்வேறு போராட்டங்களையும் தலைமை தாங்கி முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...