உலக ஆசிரியர் தினமான இம்மாதம் 6ஆம் திகதி நாடு முழுவதுமுள்ள அதிபர்கள் தங்கள் வீடுகளுக்கு முன் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக் குத் தீர்வு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப் படவுள்ளதாக இலங்கை அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுமார் 11,200 அதிபர் தரத்திலுள்ள அதிபர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார்.