எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தினால் பதில் வழங்க முடியாது போன 50 வினாக்களுக்கு பதிலளிக்கவே இச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (21) இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.