ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை மீண்டும் பெற்றது இந்தியா

Date:

ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் 3 ஆண்டுகளுக்கு தலைமை வகிக்கும். இதற்கான தேர்தல் ஐ.நா பொதுசபையில் நேற்று 15 நடைபெற்றது.
193 உறுப்பு நாடுகளில், தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க 184 நாடுகள் ஆதரவு அளித்து வாக்களித்தன. 97 வாக்குகள் பெற்றாலே, தலைமை தாங்க முடியும் என்ற நிலையில் அதிக அளவு பெரும்பான்மை பலத்துடன் இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ட்விட்டரில் பதிவிட்ட ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி, மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா தலைமை தாங்குவதற்கு அதிகப்படியான ஆதரவு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு ஆதரவு அளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் தற்போதைய பொறுப்பு இந்த ஆண்டு முடிவடையவிருக்கும் நிலையில், மீண்டும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் தொடரவுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...