குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

Date:

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக மாத்தறை முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யு  திலகரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவல்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க உள்ளிட்ட 2 பிரதிக் காவல்துறை மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் 6  காவல் துறை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவல்துறை மா அதிபராக பிரசாத் ரணசிங்க, அப் பதவியில் உள்ள நிலையில் காவல்துறை தலைமையகத்திற்கு இடமாற்றப் பட்டுள்ளார்.அத்துடன் காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா நுவன் வெதசிங்க அப் பதவிக்கு மேலதிகமாக மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் , பிரதிக் காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...