அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முன்னாள் இளைஞர் விவகார பொறுப்பாளரும் தற்போதைய பொதுச்செயலாளருமான அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் அவர்களுடனான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தி இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் அவர்களும் களுத்துறை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முப்தி அவர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இளைஞர் விவகார பிரிவினால் நாடளாவிய ரீதியிலும் களுத்துறை மாவட்டத்திலும் நடாத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட இளைஞர்கள் மத்தியில் சிறந்த முறையில் நடாத்துவதற்கான ஆலோசனைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.