தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சாம்பியன்

Date:

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

மாலத்தீவில் நடந்த இறுதி பேட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியின் 49-வது நிமிடத்தில் இந்தியா கேப்டன் சுனில் சேத்ரியும், 50 வது நிமிடத்தில் சுரேஷ் சிங், இறுதி நிமிடத்தில் ஷஹல் அப்துல் சமத் ஆகியோர் அடுத்தடுத்து கோல் திருப்பினர். இறுதியில் 3-க்கு என்ற கோல் கணக்கில் வென்று இந்திய அணி 8-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பறியது.

49-வது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம் கேப்டன் சுனில் சேத்ரியின் சர்வதேச கோல் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்து. இதன் மூலம் சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரர்களில் அர்ஜெண்டினாவின் மெஸ்சியை சமன் செய்தார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...