நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் மரணம்

Date:

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,484 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 531,070 பேர் கொரோன தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதேபோல், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 316 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,621 ஆக அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழைக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்...

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம்

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்...