நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை!

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அந்தவகையில்வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஊகிக்கப்படுகின்றது.திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழைக்கு சாத்தியம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்...

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம்

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்...