பல பகுதிகளில் இன்றும் மழை பெய்யக் கூடும்

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழை நிலைமை : கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

அனுராதபுரம் – சிறிதளவில் மழை பெய்யும் மட்டக்களப்பு – பிரதானமாக சீரான வானிலை கொழும்பு – அடிக்கடி மழை பெய்யும் காலி – அடிக்கடி மழை பெய்யும் யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும் கண்டி – அடிக்கடி மழை பெய்யும் நுவரெலியா – அடிக்கடி மழை பெய்யும் இரத்தினபுரி – அடிக்கடி மழை பெய்யும் திருகோணமலை – பிரதானமாக சீரான வானிலை மன்னார் – சிறிதளவில் மழை பெய்யும்

(வளிமண்டலவியல் திணைக்களம்)

 

Popular

More like this
Related

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த...

அர்ஜுனாவின் MP பதவியை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி...

மாற்றுத்திறனாளியான புத்தளத்தின் பிரபல கலைஞர் சலீம் கான் அவர்களுக்குப் பாராட்டு: வடமேல் மாகாண பாடல் போட்டியில் சாதனை!

புத்தளம் நகரைச் சேர்ந்த பிரபல அறிவிப்பாளரான சலீம் கான் எனப்படும், ஏ.ஆர்.எம்....

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நாளை (04) காலை...