மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.அரசு மற்றும் சுகாதார திணைக்களத்தினரும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடுகளில் நீர் தேங்கி நிற்கும் இடங்களை உடனடியாக துப்பரவு செய்து நீர் தேங்காத வகையில் சரிசெய்து கொள்ள வேண்டும்.வீடுகளில் வசிக்கும் குழந்தைகள் வயோதிபர்கள் மற்றும் ஏனையோரின் பாதுகாப்பு கருதி வீட்டு சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொவிட் முடக்க நிலை காரணமாக நீண்ட நாட்களாக இயங்காமல் இருந்த அலுவலகங்கள், பாடசாலைகள், வழிபாட்டுதலங்கள், பொதுச்சந்தைகள் மற்றும் அனைத்து பொது இடங்களையும் சுத்தம் செய்த பின்னரே மக்கள் பாவனைக்கு உட்படுத்துவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் நீர் தேங்கி டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுவதினால் மக்கள் அவதானத்துடன் செயற்படுவது மிகமிக அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...