மேலும் 44 கொவிட் மரணங்கள் பதிவு!

Date:

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தியுள்ளார்.குறித்த அனைவரும் நேற்றைய தினம் (06) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,229 ஆக அதிகரித்துள்ளது.இதன்படி, ஒக்டோபர் 06 உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட ஒரு ஆணும் 03 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 24 ஆண்களும் 15 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்ட 39 பேர் ஒக்டோபர் 06 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, நாட்டில் மேலும் 638 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 524,054 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 478,761 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேராயர் டொன் விமலசிறி ஜயசூரியவின் வருகையை முன்னிட்டு விசுத்தாராம விகாரையில் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்களுடனான கலந்துரையாடல்!

சிலாபம் மறைமாவட்டப் பேராயராகப் புதிதாகக் கடமையேற்றுள்ள கௌரவத்திற்குரிய டொன் விமலசிறி ஜயசூரிய...

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த...

அர்ஜுனாவின் MP பதவியை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி...