வடமாகாண முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு 31 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி முஸ்லிம் லீக் வாலிப முன்னணி நடத்தும் கட்டுரைப் போட்டி

Date:

கட்டுரைப் போட்டி.

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு முப்பத்தொரு ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், தமிழ் மொழி மூலம் கட்டுரைப் போட்டி ஒன்றை நடாத்துகிறது. இக்கட்டுரைப் போட்டியில் வயதுக் கட்டுப்பாடின்றி, ஆண், பெண் இருபாலரும் பங்குபற்றலாம்.

கட்டுரையின் தலைப்பு *” பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் அவல நிலையும் எதிர்காலமும்”*
வெற்றி பெறும் ஆக்கங்களுக்கு பணப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
1ம் இடம் 15 000/- ரூபா.
2ம் இடம் 10 000/- ரூபா.
3ம் இடம் 5 000/- ரூபா.
போட்டியில் பங்குபற்றும் ஏனையோருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

கட்டுரைகள் 1500 சொற்களுக்கு மேற்படாமல், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் கடந்த கால கஸ்டங்கள், நிகழ் கால பிரச்சனைகள், எதிர் கால தீர்வுகள் பற்றியதாக எழுதப்பட்டு,’டைப் செட்டிங்’ செய்யப்பட்டு
2021 நவம்பர் 15ம் திகதிக்கு முன் கிடைக்கக் கூடியதாக, அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: acumlyfadmn@gmail.com
தபால் முகவரி: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், இல: KG 7, எல்விடிகல மாடி வீட்டுத் தொகுதி,கொழும்பு 8.
(All Ceylon Union of Muslim League Youth Fronts, No: KG 7 , Elvitigala Flats, Colombo 8).
மேலதிக விபரங்களுக்கு 011267 4006, 077 227 5163 எனும் இலக்கங்களோடு தொடர்பு கொள்ளலாம்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...