ஆட்பதிவுத் திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மற்றும் தென் மாகாண அலுவலகத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி ,ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு பின்னர் முதற் பதிவுகளை பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை விநியோக நடவடிக்கைகள் இடம்பெறுமென ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.