இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதும் கொல்கத்தா!

Date:

IPL தொடரின் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இறுதி போட்டிக்கு தகுதிபெறும் இரண்டாவது அணியை தெரிவு செய்யும் தகுதிக்காண் சுற்றுப்போட்டி சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.அதற்கமைய, வெளியேறல் சுற்றில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், முதலாவது தகுதிகாண் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் இன்று மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை பதிவுசெய்தது.

இந் நிலையில், 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

அதற்கமைய, IPL இறுதிப் போட்டிக்கான இரண்டாவது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தெரிவாகியுள்ளது.முன்னதாக முதலாவது தகுதிகாண் போட்டியில் டெல்லி அணியை தோற்கடித்த   சென்னை சுப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை மறுதினம் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெல்லி கெப்பிடல் எண்ணிக்கை சுருக்கம்;

துடுப்பாட்டம்: ஷிகார் தவான் 36 ஓட்டங்கள்.

ஷ்ரேயாஸ் ஐயர் 30 ஓட்டங்கள்.

 பந்துவீச்சு ; 

ரவிச்சந்திரன் அஸ்வின் 27 -2

அன்றிச் நோர்ட்ஜே 31 -2

ஆவேஷ் கான் 22-1

ககிசோ ரபாடா 23-2

KKR எண்ணிக்கை சுருக்கம்;

துடுப்பாட்டம்:

வெங்கடேஸ் ஐயர் 55 ஓட்டங்கள்.

சுப்மன் கில் 46 ஓட்டங்கள்.

பந்து வீச்சு :

வருண் சக்ரவர்த்தி 26 – 2

லோகி பெர்கியூஸன் 26 – 1

ஷிவம் மாவி 27 -1

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...