இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 53 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 53 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக பஃப் ப்ளசிஸ் 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஏனைய வீரர்கள் 20க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர்.பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிஸ் ஜோர்டன் 20 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 135 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அணிசார்பில் அதிகபடியாகக் கே. எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஷர்துல் தாகூர் 28 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...