ஓமானுக்கு எதிரான முதலாவது டி 20 போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி!

Date:

இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களையும், தசுன் சானக்க ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் ஓமான் அணியின் ஃபயாஸ் பட் 42 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந்நிலையில், 163 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பாடிய ஓமான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக நசீம் குஷி 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் இலங்கை அணியின் லஹிரு குமார 30 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...