இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் காலி மாவட்டத்தில் 200 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள்!

Date:

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் காலி மாவட்டத்தில் 200 பாடசாலைகளில் மிடுக்கான வகுப்பறைகள் (Smart Classroom) மற்றும் நவீன கணனி ஆய்வுகூடங்களை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாளாந்தம் வளர்ச்சியடைந்து வரும் டிஜிட்டல் தொழிநுட்பத்தில் காணப்படும் இடைவெளிகளைக் குறைப்பதற்காகவும் நவீன தொழிநுட்பங்களுடன் கூடிய தரப்பண்பான கல்வி வாய்ப்புக்களை அடையாளங் கண்டு, பிள்ளைகளுக்கு நியாயமான அணுகுமுறைகளை வழங்க வேண்டிய காலத்தின் தேவையை அறிந்துகொண்டு, ´அதிக விளைவு வெளியீடுகளுடன் கூடிய சமூகமட்டக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்´ தொடர்பாக கையொப்பமிட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழிகாட்டலுக்கமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்காக 300 மில்லியன் இலங்கை ரூபாய்கள் நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.அதற்கமைய, குறித்த நிதி வழங்கலுக்கான இந்தியக் குடியரசு மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...