இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறை வீரரான யுவராஜ் சிங் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுஸ்வேந்திர சாகலுடன் பேசிய போது சாதி ரீதியிலான சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குறிப்பாக பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி சட்டத்தரணி ஒருவர் அரியானா காவல்துறையினரிடம் மனு அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டார். பின்னர் சில மணி நேரத்தில் அவர் பிணையில் விடுதலையானார். மேலும் அவர் தான் வார்த்தைகளுக்காக வருத்தம் தெரிவித்து இருந்தார்.