1975ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்துக்கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி, இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முதலாவது தலைவராக விளையாடிய பந்துல வர்ணபுர தனது 68வது வயதில் காலமானார்.
சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர் இலங்கை அணிக்காக 1982ம் ஆண்டு வரை விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.