இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தியான ஹைலண்ட் பால்மா விலையும் அதிகரித்துள்ளது.
அதனடிப்படையில், 400 கிராம் பால்மா பொதியின் விலை 90 ரூபாவினாலும், ஒரு கிலோ பால்மா பொதியின் விலை 225 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹைலண்ட் 400 கிராம் பால்மாவின் விலை 470 ரூபாவாகவும், ஒரு கிலோ ஹைலண்ட் பால்மாவின் விலை 1,170 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.
380 ரூபாவாக இருந்த குறித்த நிறுவனத்தின் 400 கிராம் பால்மா பொதியின் விலை, தற்போது 460 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.