களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவ குசலதம்ம தேரரின் இறுதி சடங்கை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி சடங்கு எதிர்வரும் 31 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.இதற்கமைய கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் எதிர்வரும் 31 ஆம் திகதி மூடுமாறு மதுவரித் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன் அன்றைய தினம் குறித்த இரு மாவட்டங்களிலும் உள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.