ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவின் இலங்கைக்கான விஜயம் நிறைவு!

Date:

GSP+தொடர்பில் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய, 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

கொழும்பு , 06 ஒக்டோபர் 2021- Generalised System of Preferences Plus (GSP+) தொடர்பில் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய, 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு 2021 செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சூழல் மற்றும் காலநிலை மற்றும் நல்லாட்சிக் கொள்கைகள் போன்றன இவற்றில் அடங்கியுள்ளன. இலங்கையில் இந்தக் குழு தங்கியிருந்த பத்து நாட்கள் வரையான காலப்பகுதியில், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச , வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச போன்ற அரசாங்க பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.

எதிர்கட்சி , சிவில் சமூக அமைப்புகளான மனித உரிமை காப்புச் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுடனும் இந்த அதிகாரிகள் சந்திப்புகளை முன்னெடுத்தனர். ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புகளின் பிரதான அதிகாரிகளுடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.

மனித உரிமைகள் மற்றும் சட்ட விதிமுறை, பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மற்றும் தொழிலாளர் உறவுகள் போன்றவற்றில் தாக்கம் செலுத்தியிருந்த விடயங்கள் தொடர்பில் கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியிருந்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) தொடர்பிலும் விஜயம் செய்திருந்த அதிகாரிகள் கலந்துரையாடியிருந்ததுடன், 2017 ஆம் ஆண்டு GSP+ திட்டத்தில் இலங்கையை மீள உள்வாங்கிய போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது என்பது பிரதான உறுதியளிப்பாக அமைந்திருந்தது.

தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு கேட்டறிந்ததுடன், அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு புதிய சட்ட வரைபு தயாராகின்றமை தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தது.

இலங்கையிலுள்ள சகல சமூகங்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிப்பது மற்றும் பாகுபாடு இன்றிய செயற்பாடுகள் தொடர்பிலும், இந்த விடயம் தொடர்பில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

போதைப்பொருள் கொள்கை, சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலும் இந்தச் சந்திப்புகளின் போது மீளாய்வு செய்யப்பட்டிருந்ததுடன், ஊழல் மோசடி பற்றியும் ஆராயப்பட்டிருந்தது. GSP+ பயன்பாடு மற்றும் எதிர்கால வர்த்தக உறவுகள் என்பது இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெபினாரின் தலைப்பாக அமைந்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஷைபி கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச அர்ப்பணிப்புகளின் வினைத்திறன் வாய்ந்த நடைமுறைப்படுத்தல் என்பதனூடாக இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையை முன்னுரிமைச் சலுகை அடிப்படையில் அணுகுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துகின்றது.

சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துடன் நாம் இணைந்து பணியாற்றுவதுடன், தொடர்ச்சியான ஈடுபாட்டை வரவேற்கின்றோம். கண்காணிப்பு மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் ஈடுபாட்டை பேணுவது என்பது, ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் சம்மேளனத்தின் அமைச்சர்களுக்கு அடிக்கடி அறிக்கைகள் சமர்ப்பிப்பதாக அமைந்திருக்கும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...