ஒத்திவைக்கப்பட்ட HNDE போட்டி பரீட்சையை 30 ஆம் திகதி நடத்த ஆளுநர் உத்தரவு

Date:

உயர்தேசிய ஆங்கில டிப்ளோமா (HNDE) பாடநெறியை பூர்த்தி செய்தவர்களில் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டது.

முன்னதாக கேள்வித்தாள்கள் கசிந்த குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட உயர் தேசிய டிப்ளமோ படித்தவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித் தேர்வுக்கு இம்மாதம் 30 ஆம்  திகதி(20.10.2021) போட்டி பரீட்சையை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண பொதுச் சேவை ஆணை குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைளில் வெற்றிடமாக  உள்ள ஆங்கில ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதன் அடிப்படையில் தொடர்புடைய பரீட்சை நடைபெற்றது. வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக பரீட்சை எழுதிய பரீடசார்த்திகள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த ஆளுநர் சிஐடிக்கு உத்தரவிட்டார்.
அந்த விசாரணையின் முடிவு, சம்பந்தப்பட்ட பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும்.
அதன்படி, சம்பந்தப்பட்ட தேர்வு எதிர் வரும் 30 ம் திகதி மீண்டும் நடைபெறும்.
 எந்தவொரு பரீட்சார்த்தியும் எதிர்வரும் 27.10.2021-க்குள் அனுமதி அட்டை கிடைக்கப்பெறவில்லை என்றால், அவர் கிழக்கு மாகாண பொது சேவை ஆணைக்குழுவுக்கு 026-2220092 எனும் தொலைபேசி இலக்கத்துடன் மேலதிக  தகவல்களை  பெறலாம்.
ஹஸ்பர் ஏ ஹலீம்_

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...