கட்டாரில் சமூக இடைவெளிகள் இல்லாது தொழுகைக்கு அனுமதி!

Date:

கத்தாரின் பள்ளிவாசல்களில் ஒக்டோபர் 03ம் திகதி முதல் சமூக இடைவெளிகள் இல்லாது தொழுகை மற்றும் ஏனைய வணக்க வழிபாடுகள் நடத்த முடியும் என கட்டார் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை கத்தாரில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (Awqaf ) இந்த அறிவிப்பை உறுதி செய்துள்ளது.

கத்தாரில் விதிக்கப்பட்டிருந்த கொவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு சாதாரண இயல்பு வாழ்க்கையை மீள கொண்டுவரும் திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் 3ம் திகதி முதல் பின்வரும் விடயங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாக அவ்காப் தெரிவித்துள்ளது.

ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆத் தொழுகைகளில் சமூக இடைவெளிகள் பின்பற்றத் தேவையில்லை
ஜும்ஆப் பிரசங்கத்தின் (ஜும்ஆ பயான்) போது மாத்திரம் ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,
பள்ளிவாசலில் அமைந்துள்ள மலசலகூடங்கள், வுழு செய்வதற்கான இடங்களைத் திறத்தல் (சனத்தொகை குறைந்த இடங்களில்)
அத்துடன் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வருபவர்கள் தங்களுக்கான தொழுகை விரிப்புக்களை கொண்டு வருவதுடன், முகக் கவசங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்பதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...