கண்டி வரலாற்று சிறப்பு மிக்க மல்வத்து மகா விகாரைக்கு இன்று (29) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சென்றுள்ளார்.இதன்போது ஷ்யமோபாலிமகா நிகாயவின் மல்வத்து மகா விகாரையின் பீடாதிபதி வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.
நாட்டில் தற்போது விவசாய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட தற்போதைய பல பிரச்சினைகள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமே நெரஞ்சன் விஜயரத்ன உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.