களனிப் பல்கலைக்கழகத்தின் வேந்தர், அதி கெளரவத்திற்குரிய கலாநிதி குசலதம்ம தேரரின் மறைவுக்கு பிரதமரின் அனைத்து மத இணைப்பாளர்கள் அனுதாபம்!

Date:

இலங்கைத் தாய்த்திருநாட்டின் இன, மத ஒற்றுமைக்காக அர்ப்பணிப்புக்களோடு உழைத்து வந்த களனி பல்கலைக்கழகத்தின் வேந்தரும், கொழும்பு – சிலாபம் பிரிவுக்கான பிரதான சங்க நாயக்கருமான அதி வணக்கத்திற்குரிய பேராசிரியர் வெலமிட்டியாவே குசல தம்ம மகா நாயக்க தேரரின் திடீர் மறைவு மிகுந்த கவலைக்கும் வேதனைக்குமுரியதாக அமைந்திருப்பதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரான பிரதமரின் மத விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர்களான சர்வமதத் தலைவர்கள் அதி வண. கலாநிதி கஸ்ஸப நாயக்க தேரர், கலாநிதி சிவஸ்ரீ பாபு சர்மா குருக்கள், அல் ஹாஜ் அஸ் ஸெய்யது கலாநிதி ஹஸன் மௌலானா அல் காதிரி மற்றும் அருட் தந்தை கலாநிதி சிக்ஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இன, மத ஒற்றுமைக்காக உழைத்துவரும் இந்த சர்வமதத் தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, அதி வணக்கத்திற்குரிய மறைந்த குசல தம்ம மகாநாயக்க தேரர் இலங்கையில் மாத்திரமல்லாமல் உலக மக்கள் மத்தியிலும் சாந்தி, சமாதானத்தை நிலை நிறுத்துவதற்காக மிகவும் பொறுப்புடன் தம் செயற்பாடுகளை மிகுந்த ஒத்துழைப்புக்களோடு முன்னெடுத்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தில் வேந்தராக இருந்து சேவையாற்றிய காலகட்டத்தில் தம்முடன் சேவையாற்றிய பேராசிரியர்கள், கலாநிதிகள் மற்றும் பட்டப்படிப்பு மாணவ, மாணவிகளுடன் அன்பாகவும் பண்பாகவும் நெருங்கி பணியாற்றிய மகாநாயக்க தேரர் இன, மத மற்றும் தேசிய ஒற்றுமைக்கு உச்ச மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கி செயற்பட்டார். அவரது கௌரவமான செயற்பாடுகளின் ஊடாக புத்தர் பெருமானின் உயரிய பண்புகளைக் காணக்கூடியதாக இருந்தது.

இலங்கையின் முக்கியத்துவம்மிக்க தேரர்களில் ஒருவராக இருந்து சேவையாற்றி வந்த மகாநாயக்க தேரர், இந்நாட்டில் இன, மத ஒற்றுமையைப் பாதிக்கக்கூடிய சிக்கல்கள் உருவான சந்தர்ப்பங்களில் எல்லாம் முன்னணிக்கு வந்து இன, மத ஒற்றுமையைப் பாதுகாக்கவும் இனங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை மேம்படுத்தவும் கௌரவமான பல்வேறு சேவைகளை முன்னெடுத்துள்ளார்.
அதி வண. குசல தம்ம மகாநாயக்க தேரர் போன்று நாட்டுக்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவைகள் ஆற்றக்கூடிய உயரிய பண்புகள் கொண்ட தேரர்கள் ஆயிரக்கணக்கில் நாட்டில் உருவாக வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம். அவரது மறைவு இலங்கை மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலகில் அமைதி, சமாதானததை விரும்பும் சகல இன, மத மக்களுக்கும் பாரிய இழப்பும் மிகுந்த சோகம் நிறைந்த நிகழ்வுமேயாகும் என்றும் அவர்கள் அந்தஅறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...