T20 Highlights: ஆஸியிடம் வீழ்ந்தது இலங்கை; 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 22 வது போட்டியில் இன்று (28) இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.இதில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றி அடைந்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

155 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபடியாக டேவிட் வோர்னர் 65 , ஆரோன் பின்ச் 37 , ஸ்மித் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தார்கள்.பந்து வீச்சில் எடம் சாம்பா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சரித் அசலஙக 35 , குசல் ஜனித் பெரேரா 35, பானுக ராஜபக்ஷ 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பெற்ற எடம் சாம்பா தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அணி இப் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.

 

 

Popular

More like this
Related

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...