களனி முதுன்கொட வீதியில் நீர்க்குழாய் தொகுதி விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 10 மணி வரையில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் , சியம்பலாபேவத்த, பியகம , தெல்கொடை, உடுபில, அகுரமுல்ல, கேரகல, தெமலகம, கந்துபொட, தெகடன, பெஹெல , இந்தொலமுல்ல , தொம்பே, நாரங்கல, வெலிவேரிய, மற்றும் ரதுபஸ்வவ ஆகிய பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.