அப்ரா அன்ஸார்
ஒக்டோபர் 17 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமான ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் 22 போட்டிகள் மிக விறு விறுப்பாக நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள போட்டிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அனைத்து போட்டிகளும் ஆரம்பிப்பதற்கு முன்னர் மைதானத்தில் மண்டியிட்டும் , வேறு முறைகளிலும் கருப்பர்களின் வாழ்க்கை முக்கிய இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள்.மேற்கந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சில நொடிகள் மண்டியிட்டு கருப்பர்களின் வாழ்க்கை முக்கிய இயக்கத்துக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டுமென தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருந்தது.
அமெரிக்காவில் காவலர் டெரிக் செவின் , அமெரிக்கா கறுப்பின தந்தவர் ஜார்ஜ் பிளாயிட் திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டி அவரின் கழுத்தில் முழங்காலை மடக்கி அமர்ந்து கொலை செய்தார்.இச் சம்பவம் உலக அளவில் பெரும் கவனத்தை கொண்டு வந்து பல்வேறு எதிர்ப்பலைகளை உருவாக்கியிருந்தது.அப்போது இனவெறிக்கு எதிராக மற்றொரு போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலை இச் சம்பவம் ஏற்படுத்தியதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
கறுப்பினர்கள் மாத்திரமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்பதற்கு ஆதரவாகவே இவ்வாறு விளையாட்டு வீரர்கள் செய்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் கடந்த 24 ஆம் திகதி போட்டியின் போது இந்தியா அணி வீரர்கள் முழங்காலிட்டும் , பாகிஸ்தான் வீரர்கள் நெஞ்சில் கை வைத்தும் கறுப்பினர்களுக்கு ஆதரவாக இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இனவெறிப் பிரச்சினையால் பாரிய பிரச்சினைகளை முகம்கொடுத்து வருகின்ற தென் ஆபிரிக்கா இன வெறிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென் ஆபிரிக்கா வீரர்கள் போட்டி ஆரம்பிக்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் இது தொடர்பாக தென் ஆபிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் “லாசன் நைடோ ” வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இனவெறியை அனைவரும் கடந்து வருவதற்கு ஒற்றுமையாகவும் , பிணைப்புடன் நமக்குள் வலிமையை ஏற்படுத்த வேண்டும்.இனவெறி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.ஆனால் இனவெறியொன்று வரும் போது அனைவரும் அதற்கு எதிராக ஒன்றுபட வேண்டும்.
இந் நிலையில் கடந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் டி கொக் அவருடைய தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லையென தெரிவித்தார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பர்களின் வாழ்க்கை முக்கிய இயக்கத்துக்கு தனது ஆதரவு தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் டி கொக் விளையாடவில்லை என அறிவித்திருந்தார்.இதனால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்ற டி கொக் சில நாட்களுக்கு பின்பு ஏன் அவ்வாறு செய்தார் என்பதை கூறியிருக்கிறார்,
இதற்காக எனது அணி வீரர்களிடையேயும், இரசிகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன் .இதனையொரு பிரச்சினையாக்க வேண்டுமென நான் முயலவில்லை.இன பாகுபாடுக்கு எதிராகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை தற்போது உணர்கிறேன்.இனபாகுபாட்டுக்கு எதிரான செயல்பாடாக மண்டியிடுவதன் மூலம் மற்றவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடததால் நான் யாரையும் அவமதிக்க நினைக்கவில்லை.என்னுடைய குடும்பத்திலும் அனைத்து இனத்தவர்களையும் இருக்கின்றார்கள்.என் சகோதரிகள் கருப்பினத்தை சேர்ந்தவர்கள்., என் வளர்ப்புத் தாய் கருப்பினத்தவர்.எனவே நான் பிறந்ததிலிருந்தே கருப்பர்களின் வாழ்க்கையும் , முக்கியத்துவத்தையும் அறிந்தவன்.சமூகத்தின் சம உரிமை முக்கியமானது.நம் அனைவருக்கும் உரிமையும், முக்கியமும் உண்டு என சொல்லித் தந்து தான் என்னை வளர்த்தார்கள்.நாங்கள் என்ன செய்ய வேண்டும் என கட்டளை பிறப்பிக்கும் போது என் உரிமையை இழந்தவனாகவே ஆக்கினேன்.
கிரிக்கெட் வாரியத்துடன் உணர்வுபூர்வமான விவாதமொன்று நடைபெற்றது.அவர்களுடைய நோக்கம் பற்றிய புரிதல் அனைவருக்கும் உண்டு.இந்த விவாதம் ஏற்கனவே நடைபெற்றிருக்கலாம்.அன்றைய தினம் நடந்ததை தவிர்த்திருக்கலாம்.நான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.முன்பு அவரவர் விருப்பப்படி நடந்து கொள்ளலாம் என்றார்கள்.என்னுடைய எண்ணங்களை எனக்குள்ளே வைத்துக் கொண்டேன்.
என்னுடைய வாழ்க்கையில் அனைவரையும் நேசித்து வாழும் போது எதற்காக சைகையின் மூலம் என் உணர்வை வெளிப்படுத்த வேண்டும்? இதற்கான காரணம் எனக்கு புரியவில்லை.எந்த ஒரு விவாதமுமின்றி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் போது அதன் அர்த்தத்தை இழப்பதாக எண்ணினேன்.இனவெறியாளராக நான் இருந்திருந்தால் மண்டியிட்டு பொய்யாக நடந்து கொண்டிருக்க முடியும்.அது பிழையானது அவை சிறந்த சமூகத்தை உருவாக்காது.என்னுடைய சகோதரர்கள் , விளையாட்டு வீரர்களுக்கு என்னைப் பற்றி தெரியும் .என்னை முட்டாள் ,சுயநலக்காரர் என பல்வேறு விதமாக விமர்சித்துள்ளார்கள்.அவை என்னை காயப்படுத்தவில்லை.எனினும் என்னை இன வெறியாளர் எனும் போது அது என்னையும், கர்ப்பிணியாக இருக்கின்ற என் மனைவியையும் , குடும்பத்தையும் அதிகமாக காயப்படுத்தியுள்ளது.நான் எப்படிப்பட்டவன் என்று எனக்கு தெரியும் என்றார் கொக்.தீடிரென பின்பற்ற வேண்டிய கடமைகளை கூறியதும் அதிர்ச்சியடைந்தேன்.நாட்டுக்காக விளையாடுவதை விடவும் வேறு மகிழ்ச்சி எனக்கு இல்லை.ஆரம்பத்திலே இதனை சரி செய்திருக்க வேண்டும்.இதனால் நாட்டுக்கு வெற்றி தேடித்தர வேண்டிய பணியில் கவனம் செலுத்தியிருப்போம்.நாங்கள் எப்போது உலகக் கோப்பை போட்டிக்கு சென்றாலும் பரபரப்பு ஏற்படுகிறது.இது நியாயமில்லை .எனக்கு ஆதரவு அளிக்கும் வீரர்களுக்கும், தலைவருக்கும் நன்றி என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து குயின்டன் டீ கொக்கிற்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில்.மண்டேலாவின் தென்னாப்பிரிக்கா இது அல்ல என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ஸல்மான் பட் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது,
இனவெறிக்கு எதிராகத் தென் ஆபிரிக்கா வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு ஒற்றுமையாக செயல்பட்ட போதும் குயின்டன் டீ கொக் மட்டும் தனிப்பட்ட பிரச்சினையென கூறி விலகியது, இது மண்டேலாவின் தென்னாப்பிரிக்கா அல்ல என்பதையே காட்டுகிறது என்றார்.
இது குறித்து ஸல்மான் பட் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
டீ கொக் செய்தது புதுவிதமானதாக இருக்கிறது.இனவெறிக்கு எதிராக அணியில் உள்ள ஒவ்வொருவரும் செயல்படும் போதும் மனிதர்கள் அனைவரும் சமமானவர்களாகும்.அவர்களை இனம், நிறத்தின் அடிப்படையில் பிரிக்கக் கூடாது என்று சத்தியம் செய்யும் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்காதது வியப்பானதாகும்.முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக செயல்படுவது ஒவ்வொரு வீரர்களுடைய விருப்பத்திலாகும்.இதற்கு டீ கொக் ஒத்துழைக்காத நிலையில் மேலும் பிரிவினையை ஏற்படுத்தும் .இது தெரிந்தும் எதற்காக கொக் இவ்வாறு செய்தார் என்று எனக்கு தெரியவில்லை.
கறுப்பினத்தவர்களும், வெள்ளையர்களும் அதிகமாக இருக்கும் நாட்டில் டீ கொக் வாழ்கிறார்.ஆனால் நிச்சயமாக அவர் மண்டேலாவின் தென்னாப்பிரிக்கா நாட்டில் வாழவில்லை என்றார்.தென் ஆபிரிக்காவில் சூழல் மேம்பட்டதும் அவர்களை மீண்டும் உலகத்தின் நீரோட்டத்தில் மக்களை ஒன்றாக மண்டேலா இணைத்தார். ஆனால் அவர் செய்தவை வீணாகிவிட்டன, அவர் கூறிய விடயம் உலகில் அனைவரும் சமமானவர்கள் என்ற மிக எளிமையான விடயத்தையே ஆகும்.
தென்னாப்பிரிக்கா அணி இட ஒதுக்கீடு முறையில் தான் இயங்கி வருகிறது.அவர்களின் முதல் போட்டியின் போது அணியில் உள்ள சிலர் ஓரமாக அமர்ந்தும் சிலர் தனித் தனியாக நின்று கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.நிச்சயமாக தென்னாப்பிரிக்கா அணியினர் மன உளைச்சலோடு இருப்பதாக நினைக்கிறேன்.அவர்களின் நம்பிக்கைகள், கலாச்சார வேறுபாடுகள் அதிகமாக வெளிப்படையாகத் தெரியக் கூடாது.இவர்கள் இங்கு கிரிக்கெட் விளையாட மாத்திரமே வந்துள்ளார்கள் என பட் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.