சகல மாவட்டங்களுக்கும் பெரும்போகச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் இன்று (31) ஆரம்பமாகும் என விவசாய திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம் எல் அபயரத்ன தெரிவித்துள்ளார்.
திரவ உரம் மற்றும் நெனோ நைதரன் உறங்களும் இதன் போது இலவசமாக வழங்கப்படவுள்ளது.அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப் பசளை விநியோகிக்கும் வேலைத்திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதாக விவசாய திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
( அரசாங்க தகவல் திணைக்களம்)