ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

Date:

அனைவரதும் நம்பிக்கைக்குரியவராக மாற வேண்டுமெனில், கருணை மற்றும் நேர்மை என்பன அவசியமென்று உலகுக்கு சுட்டிக்காட்டிய முஹம்மத் நபி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.
எந்தவொரு சமூகத்திலும் வாழ்கின்ற மனித குலத்தின் சிந்தனை மற்றும் நடத்தை என்பவற்றின் அடிப்படையாக அமைவது, அவர்கள் நம்பிக்கைக் கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஆழமான மார்க்கமே ஆகும்.
இறைவன் நேர்மையுள்ள மனிதர்களுக்கு கருணை காட்டுவதோடு, அவ்வாறான மனிதர்களுக்குத் தகுதியான உயர் அந்தஸ்த்து வழங்கப்படுவதை, முஹம்மத் நபி அவர்களின் வாழ்க்கை மற்றும் முன்மாதிரியான நடத்தை என்பவற்றை ஆழமாகக் கற்கும்போது விளங்கிக்கொள்ள முடிகிறது.
இலங்கை உட்பட உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் கௌரவத்துக்குரிய முஹம்மத் நபி அவர்களின் வழிகாட்டல்களை மேலும் சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபி அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் என்று நான் நினைக்கின்றேன்.
அவர்களின் வாழ்வு முழுவதும் மனித நலனைக் கருத்திற்கொண்டு கடைபிடித்து வந்த குணாம்சங்களை, ஏனைய காலங்களை விடவும் தற்போதைய சூழ்நிலையிலேயே சமூக நலனை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவது பொருத்தமானதாக அமையும்.
இன்றும், உலக மக்களின் மரியாதைக்குரிய நபி அவர்களின் வாழ்க்கை வழிகாட்டல்களை கௌரவத்துடன் பின்பற்றி வருகின்ற இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலகவாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் சுபீட்சமும் சௌபாக்கியமும் உருவாக வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.
கோட்டாபய ராஜபக்ஷ
2021 ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...