ஜனாதிபதியைச் சந்தித்தார் எகிப்து தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி

Date:

தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாட்டை விட்டுப் புறப்படவுள்ள இலங்கைக்கான எகிப்து நாட்டின் தூதுவர் ஹுஸைன் அல் சஹார்ட்டி (Hussein El Saharty) அவர்கள், இன்று (18) முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
எகிப்து நாட்டுச் சிவில் அமைப்பொன்றின் ஒருங்கிணைப்பாளராகப் புதிதாக நியமனம் பெற்றுள்ள அவர், இலங்கையுடனான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதாகத் தெரிவித்தார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகள் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்திக்கொள்வதன் அவசியம் தொடர்பிலும், ஹுஸைன் அவர்கள் தொடர்ந்து எடுத்துரைத்தார்.
இலங்கைக்கான எகிப்து தூதுவராக ஹுஸைன் அவர்கள் இந்நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்த சேவையை, ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டினார்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் அட்மிரல் ஜயநாத் கொழம்பகே மற்றும் எகிப்து தூதரகத்தின் ஆலோசகர் கரீம் அபுலெனயின் (Karim Abulenein) ஆகியோரும், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...