ஜப்பானில் தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொவிட் பெருந்தொற்றால் சென்ற ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை பயிலும் 415 குழந்தைகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக அந்நாட்டின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டை விட சுமார் 100 தற்கொலை சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொவிட் பெருந்தொற்றால் பள்ளி மற்றும் வீடுகளில் ஏற்பட்ட சூழ்நிலை மாற்றங்கள், குழந்தைகளின் மனதை பாதித்திருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது .