ஜெய்ஸ்வாலின் அதிரடியால் வீழ்ந்தது சென்னை சுப்பர் கிங்ஸ்!

Date:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 47ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 07விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.அணிசார்பில் அதிகபடியாக ருதுராஜ் கெய்வாட் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ராகுல் தெவாடியா 39 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.இந் நிலையில், 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 17.3 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.அணிசார்பில் அதிகபடியாக ஷிவம் துபே ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஷர்துல் தாகூர் 30ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...