தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளவர்கள் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் | வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்

Date:

தமது வாழ்கையை முன்னெடுக்க தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இடைத்தரகர்களிடம் சிக்காமல், தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான நேரடி அணுகல்களை அதன் கட்டுப்பாட்டின் கீழ் உரிமம் பெற்ற தரப்பினரிடமிருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ளுமாறு அந்தப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இதுபோன்ற உரிமம் பெற்ற 800 முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதில் ஏதேனும் சிக்கல் நிலை காணப்படுமாயின் 24 மணிநேரமும் செயற்படக்கூடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...