உலகின் மிகப்பெரிய எவர் ஏஸ் (Ever Ace) கொள்கலன் கப்பல் நாளை (05) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் உள்ள இந்த பாரிய கப்பல் 23,992 கொள்கலன்களை கொண்டு வருகின்றது.
நெதர்லாந்து ரொட்டர்டாம் துறைமுகத்திலிருந்து சுயஸ் கால்வாயூடாக இந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
உலகின் 24 துறைமுகங்கள் மட்டுமே இந்தக் கப்பலை கையாள முடியும் என்றும், . தெற்காசியாவில் கொழும்பு துறைமுகத்தில் மட்டுமே இந்தளவு பிரமாண்டமான கப்பல் நங்கூரமிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.