“பண்டோரா பேப்பர்ஸ் ” விசாரணைகள் ஆரம்பம்!

Date:

விசேட விசாரணை குழுவொன்றை நியமித்து பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் அந்த பரிவர்த்தனைகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதை அடுத்து இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (06) முதல் ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று பண்டோரா வௌிப்படுத்தல் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...