பருவ கால (சீசன்) பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்