எதிர்வரும் 19 மற்றும் 20 ஆகிய விடுமுறை தினங்களை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கடுமையாக அமுல்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.