கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.இந்த சேவைகள் எதிர்வரும் 1 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் மாத்திரம் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.அதற்கமைய 133 புகையிரதங்கள் சேவையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.தொடரூந்து பயணச் சீட்டு பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.