மேலும் 19 கொவிட் மரணங்கள் பதிவு; 437 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

Date:

கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (22) உயிரிழந்தவர்களாகும் என குறித்த அறிக்கை தெரிவிக்கின்றது.அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,593 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 437 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு ள்ளானவர்களின் எண்ணிக்கை 535,412 ஆக உயர்ந்துள்ளது.கொவிட் தொற்றிலிருந்து இன்று மேலும் 350 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 503,090 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...