விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவிற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்!

Date:

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழான ஆசிய பசுபிக் பிராந்திய உறுப்பு நாடுகளின் சுற்றாடல் அதிகாரிகளின் நான்காவது கூட்டத்தொடரின் தலைமைத்துவ பதவிக்கு சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவாகியுள்ளார்.

கொரியா நாட்டின் சுவோன் நகரில் இன்று (06) இடம்பெற்ற கூட்டத் தொடரில் அவர் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி அனில் ஜாசிங்க அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் 5ஆவது பொதுச்சபை கூட்டத்தில் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அதிகாரிகள் பணியகத்தின் தலைவராக அந்த கூட்ட தொடரில் பங்கேற்பார்.ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 47 உறுப்பு நாடுகள் மற்றும் சுற்றாடல் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் சுற்றாடல் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...