விராட் கோலி, கிறிஸ் கெய்லின் சாதனைகளை முறியடித்து மீண்டும் சாதனை நிலைநாட்டிய பாபர் அசாம்!

Date:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டில் 7,000 ரன்களை அதிவேகமாகக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை நேஷனல் டி20 கோப்பை கிரிக்கெட்டில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ராவல்பிண்டியில் சதர்ன் பஞ்சாப் அணிக்கும் செண்ட்ரல் பஞ்சாப் அணிக்கும் இடையிலான போட்டியில் செண்ட்ரல் பஞ்சாப் 120 ரன் இலக்கை கடந்த போது 25 ஓட்டங்களை பெற்ற பாபர் ஆசம் டி20 இல் 7,000 ரன்களை அதிவிரைவில் எடுத்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.கிறிஸ் கெய்ல் 192 இன்னிங்ஸ்களில் 7000 டி20 ரன்களையும் விராட் கோலி 212 இன்னிங்ஸ்களில் 7,000 டி20 ரன்களையும் எடுக்க பாபர் ஆசம் 187 போட்டிகளில் 7,000 ஓட்டங்களை கடந்து வரலாறு படைத்துள்ளார்.

இந்த 7,000 ரன்களில் பாபர் ஆசம் சர்வதேச டி20 போட்டிகளில் 61 ஆட்டங்களில் 2,204 ரன்களை எடுத்திருந்தார். சராசரி 46.89. இதில் ஒரு சதம் 20 அரைசதங்களையும், தனியார் போட்டியில் 3058 ரன்களையும், பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் லீக், பங்களா தேஷ் லீக், இங்கிலாந்து வைட்டாலிட்டி பிளாஸ்ட் ஆகியவற்றில் 84 போட்டிகளில் 3058 ரன்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

நேஷனல் டி20 கோப்பையில் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 259 ரன்கள் எடுத்துள்ள பாபர் ஏற்கனவே இந்தத் தொடரில் ஒரு சதம் உட்பட டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் எடுத்தவர்கள் வரிசையிலும் விராட் கோலியின் சாதனையை தகர்த்தெறிந்துள்ளார். விராட் கோலி 5 சதங்களை மட்டும் எடுக்க பாபர் ஆசம் 6 வது சதத்தை கடந்த வாரம் பெற்றுக் கொண்டார்.அதிக சதம் அடித்தவர்களில் ஷேன் வாட்சன், ரோகித் சர்மா ஆகியோரையும் பாபர் ஆசம் கடந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...