30 வயதுக்கு மேற்பட்ட 95 % மானோருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது!

Date:

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் சுமார் 95 சதவீதமானோருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளதாக !தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) முற்பகல் காணொளி தொழிநுட்பம் ஊடாக இடம்பெற்ற கொவிட் தடுப்பு விசேட குழு கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை  தெரிவித்துள்ளது.

மேலும், 20 முதல் 30 வயதுக்கு இடையப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கும் மற்றும் 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய மற்றும் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி வெற்றிகரமாக போடப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பாக விரிவான கணக்கெடுப்பு ஒன்றை நடத்த கொவிட் தடுப்பு குழு தீர்மானித்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...