T20 Highlights: “சூப்பர் 12” இன் 23 வது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 3 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 23 வது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.இப் போட்டியில் மூன்று ஓட்டங்களால் மேற்கந்திய தீவுகள் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

மேற்கந்திய தீவுகள் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் நிகொலஸ் பூரண் 40 , ரோஸ்டன் சேஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பங்களாதேஷின் பந்துவீச்சில் மஹ்தி ஹசன் ,முஸ்தபிஷுர் ரஹ்மான் மற்றும் இஸ்லாம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

143 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு தோல்வியை தழுவியது.

பங்களாதேஷின் துடுப்பாட்டத்தில் லிடன் தாஸ் அதிகபட்சமாக 44 ஓட்டங்களையும் , அணித்தலைவர் மஹ்முதுல்லாஹ் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்கள்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...