ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் சூப்பர் 12 இன் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளது. அதில் முதலாவது போட்டியாக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.நாணய சுழற்சி இடம்பெற்ற நிலையில் இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டி சார்ஜாவில் இடம்பெறுகின்றது.இலங்கை அணியில் சிறு மாற்றமாக உபாதைக்குள்ளான மஹீச் தீசனவிற்கு பதிலாக பினுர பெர்ணான்டோ விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.