ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 25 வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோது வருகின்றது.இன்றைய போட்டி சார்ஜாவில் இடம்பெறுகின்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக பெத்தும் நிசங்க 72 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் டப்ரைஸ் ஷம்ஸி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
143 என்ற வெற்றி இலக்கை நோக்கி தற்போது தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கவுள்ளனர்.