ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 24 வது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகிறது.இன்றைய (29) போட்டி டுபாயில் இடம்பெறுகின்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் ஹஸரதுல்லாஹ் செசாய் ஓட்டம் ஏதுமின்றி வெளியேறினார், முஹம்மத் செதாட் 8 , ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் 10, அஸ்கர் ஆப்கான் 10, கரீம் ஜன்னத் 15 , நஜிபுல்லாஹ் 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது முஹம்மத் நபி 35(32) , குல்பதின் நயீப் 35(25) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி 1 ( 22), ஹரீஸ் ரொவ்ப் 1,(37), ஹசன் அலி 1 ( 38) , சதாப் கான் 1 ( 22) ,இமாத் வஸீம் 2 ( 25) வீதம் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
தற்போது 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளனர்.