கொவிட் தொற்று உறுதியான மேலும் 101 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று 453 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.அதன்படி இன்று கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 554 ஆக உயர்வடைந்துள்ளது.கொவிட் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 533,860 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 17,834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8,790 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.அதன்படி நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 502,464 ஆக அதிகரித்துள்ளது.